×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே விஸ்வரூபம் எடுத்த உப்பூர் அனல் மின்நிலைய பிரச்சனை

ஆர்.எஸ்.மங்கலம், மே 8: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூரில் அமைந்துள்ள அனல் மின்நிலையத்தின் அருகில் உள்ள நீர்வழி தடங்களை அனல் மின் நிலையத்தினர் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறிய பொதுமக்களுடன் தாசில்தார் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பூரில் தலா 800 மெகாவாட் மின் திறன் கொண்ட 2 அனல் மின் (உலைகள்)நிலையங்களின் பணி கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 900 ஏக்கர் நிலப்பரப்பில் பெல் என்ற நிறுவனம் டென்டர் எடுத்து பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதற்கு இப்பகுதியை சேர்ந்த கிராம மக்களும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். ஒரு சிலர் நீதிமன்றம் வரையிலும் சென்று வழக்கு தொடர்ந்து ஒரு சிலரது வழக்குகள் கூட நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வே எண் 407 என்ற பகுதியில் ஒப்பந்த நிறுவனம் பிற பகுதியில் இருந்து மண் எடுத்து வந்து பள்ளத்தை சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர் இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களை முற்றுகையிட்டனர். அப்போது தேர்தல் நேரம் என்பதால் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் தமீம்ராஜா முற்றுகையிட்ட பொதுமக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தார். அப்போது தேர்தல் முடிந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று உறுதிமொழி கொடுத்தனர். இந்நிலையில் நேற்று ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் தமீம்ராஜா தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மின்வாரியம் சார்பாக செயற்பொறியாளர் வெங்கடேஷ்வரன், ஒப்பந்த நிறுவனமான பெல் நிறுவன உதவி பொது மேலாளர் ெதட்ஷனாமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்.ரகு, துணை வட்டாட்சியர் பிரேமா, ஆர்.ஐ மாதவன் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் சார்பாக தெய்வேந்திரன், தனமதிவாணன், கிருஷ்ணன் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

 இதில் இப்பகுதி மக்களின் சார்பாக முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டது. நீர்வழி தடப்பகுதியான சர்வே எண் 407 பகுதியில் மண்ணை கொட்டிமேடாக்க கூடாது. அதேபோல் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீட்டு பயன்பாடு, மற்றும் விவசாய பயன்பாட்டுக்காக போடப்பட்டுள்ள கினறு மற்றும் போர்வெல் கினறுகளில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் தண்ணீரை வணிக நோக்கத்துடன் விற்பனை செய்யக்கூடாது என எதிர்ப்பு தைரிவித்ததோடு அந்த தண்ணீரை உப்பூரில் உள்ள அனல் மின்நிலைய நிர்வாகம் கொள்முதல் செய்யக்கூடாது என்றும், தண்ணீரை விற்பனை செய்யலாம் என்ற வணிக உரிமம் பெற்றவர்களிடம் மட்டுமே தண்ணீரை வாங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த வட்டாட்சியர் தமீம்ராஜா பொது மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் அழகுராஜா, அருள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags : RS Mangalam ,
× RELATED இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில்...